இரண்டு நாளில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்; சமாளிக்க புது ஏற்பாடு!

petrol pump strike
பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயிக்கப்படுவதை எதிர்த்தும், டீலர் கமிஷன் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், அக்., 13ல், தமிழகம் உட்பட, நாடு முழுவதும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 4,850 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.

இவற்றை, அந்தந்த நிறுவனங்கள் நியமித்துள்ள, ‘டீலர்’கள் நடத்தி வருகிறார்கள். இதுதவிர, எண்ணெய் நிறுவனங்களும், பல இடங்களில், சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்துள்ளன.

இது குறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் ,’’தீபாவளி நெருங்கி உள்ளதால், பெட்ரோல், டீசலுக்கு அதிக தேவை நிலவுகிறது. இந்த நிலைமையில் பங்க் உரிமையாளர்கள், வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

அவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நாளில் எண்ணெய் நிறுவனங்கள் சொந்தமாக நடத்துகிற 150 பெட்ரோல் பங்க்குகளும் செயல்படும்; கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்குகளும் இயங்கும்.அவற்றில் வழக்கத்தை விட, அதிக பெட்ரோல், டீசல் ஸ்டாக் வைத்து, வாகன ஓட்டிகளின் தேவைக்கு ஏற்ப, உடனுக்குடன் சப்ளை செய்யப்படும். இதனால், வாகன ஓட்டிகள் பயப்படத் தேவையில்லை’’ என்று சொன்னதாக செய்திகள் வருகின்றன!

Leave a Response