சிவாஜி சிலையில் கருணாநிதி பெயரா? நோ சான்ஸ்! -கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

 

நடிகர் சங்க பொதுக்குழுவில் சினிமாவிற்கு “மணிமண்டபம் கட்டிவிடாதீர்கள்” என விஷால் கூறியதற்கு பதிலளித்து பேசிய  அமைச்சர் கடம்பூர் ராஜூ “சினிமாத்துறையை பாதுகாப்பதே அதிமுக அரசுதான். இந்த 10-சதவிகித கேளிக்கை வரி விளக்கிக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே இல்லை” .என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

201705051613421574_Minister-Kadambur-Raju-Says-ADMK-two-teams-will-join_SECVPF

அமைச்சர் கடம்பூர் ராஜூ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியொன்றில் கூறியிருப்பதாவது,

  • அதிமுக அரசு தான்சினிமாத்துறையை பாதுகாக்கும்  அரசாக இருக்கிறது. வாட்வரி வந்த நேரத்தில் விலக்கு அளித்தவர்  ஜெயலலிதா.
  • 30-சதவீத கேளிக்கை வரி நிர்வாகம்  சார்பாக அறிவிக்கப்பட்டநேரத்தில்திரைத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதன் அடிப்படையிலேயே  10 சதவீதமாக குறைக்கப்பட்டது.
  • முன்னர்  நடைமுறையில் இருந்த கட்டணம்குறைவாக இருந்தால், மக்கள் அதிகவிலை கொடுத்துதான்  பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அவர்கள்  கோரிக்கையின் அடிப்படையிலையே தற்போது நிர்ணயம் செய்திருக்கிறோம்.கோ
  • திரையரங்க உரிமையாளர்கள்தான் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
  • சில மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் கேளிக்கை வரி உள்ளது. அப்படி பார்த்தால்தமிழகம் தான் திரைத்துறைக்கு வரிவிலக்கு, மானியம்உட்பட பல்வேறு சலுகைளை வழங்கி வருகிறது. கே
  • சிவாஜி மணிமண்டபத்தின்உள்ள சிவாஜி நிலையிலிருந்து அகற்றிய கருணாநிதியின்பெயரை மீண்டும்இடம்பெறச் செய்யவேண்டும்என்ற நடிகர்சங்கத்தின்கோரிக்கை நிச்சயம்ஏற்றுக் கொள்ளப்படாது. முன்னரே சரியான இடத்தில்வைக்காமல் அகற்ற காரணமாக இருந்ததே திமுக அரசு தான்”என்றார்.

 

நடிகர் சங்கம் , தயாரிப்பாளர்கள் சங்கம் , தியேட்ட உரிமையாளர்கள் சங்கம் என எல்லாரும் பேச்சுவார்த்தை, போராட்டம் அறிவித்திருக்கும் நிலையில் “10-சதவிகித கேளிக்கை வரி விளக்கிக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என அமைச்சர் கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response