சசிகலாவுக்கு பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை- இன்றே விடுவிப்பு!

 

சசிகலாவுக்கு 5-நாட்கள் பரோல் வழங்கியது கர்நடகா சிறைத்துறை, இன்றே விடுக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai: AIADMK General secretary VK Sasikala praying at Jayalalithaa's shrine at Marina beach in Chennai before leaving to Bengaluru for appearing in front of court on Wednesday. PTI Photo by R Senthil Kumar(PTI2_15_2017_000186B)

சொத்து குவிப்பு வழக்கில் 4-ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு 5-நாட்கள் பரோல் வழங்கியுள்ளது கர்நாடகா சிறைத்துறை. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருகிறார். அவரை அழைத்துவர தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பெங்களூரு சென்றுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கணவர் நடராஜனை பார்க்க சசிகலா லீவ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து கடும் நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கொடுத்திருக்கிறது கர்நாடகா சிறைத்துறை.

பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா விடுவிக்கப்பட உள்ளார். அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்காக தினகரன் பெங்களூரு சிறையில் காத்திருக்கிறார்.

முன்னதாக சசிகலா 15-நாட்கள் பரோல் கேட்டிருந்தார். ஆனால் அவரது மனுவில் கணவர் நடராஜன் தொடர்பான மருத்துவ ஆவணங்கள் முறையாக இல்லை என கூறி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் சான்றிதழ் தமிழக அரசின் சான்றிதழ் பின்னர் மீண்டும் உரிய ஆவணங்களுடன் பரோல் கேட்டு விண்ணப்பித்தார் சசிகலா.

அம்மனுவை ஏற்று தமிழக அரசிடம் தடையில்லா சான்றிதழை கோரியது கர்நாடகா சிறைத்துறை. தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில் சசிகலாவுக்கு 5 நாட்கள் மட்டும் பரோல் வழங்கியுள்ளது கர்நாடகா சிறைத்துறை.

வரும் 10-ந் தேதியன்று சசிகலா மீண்டும் பெங்களூரு சிறைக்கு திரும்ப வேண்டும்.

Leave a Response