‘காட்டேரி’ படத்தில் பிக்பாஸ் ஓவியா!

kaatteri1

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை ஓவியாவிற்கு படங்களில் நடிக்க பல தயாரிப்பாளர்களிடம் இருந்து அழைப்புகள் குழிந்தன.

எல்லாவற்றையும் அவர் மறுத்துவிட்ட நிலையில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ‘ஹரஹர மஹாதேவி’ பத்திரிகையாளர் காட்சி சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது. இந்த அரங்கில் ஞானவேல்ராஜாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானது.

kaatteri

புதிய படத்திற்கு ‘காட்டேரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் பிரபல நடிகர் சாய்குமாரின் மகன் ஆதி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஓவியாவும் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அறிவித்தார். இயக்குனர் டிகே இயக்கவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Response