களவாணி 2’ல் எதார்த்தமாக நடித்துள்ள புதுமுகம்.

2010 ஆம் ஆண்டில் விமல், ஓவியாவின் யதார்த்த நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கிய இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.

மீண்டும் அதே எதிர்பார்ப்பில் விமல்,ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது ‘களவாணி 2’. இந்த படத்தையும் சற்குணமே இயக்கியிருக்கிறார்.

ஜூலை 05ம் தேதியன்று உலகெங்கும் வெளியான இப்படம், நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது

இப்படத்தில், ஓவியாவின் தந்தையாக நடித்திருப்பவர் ராஜ்மோகன்குமார். செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் இந்த புதுமுக நடிகர் ராஜ்மோகன்குமார்.

கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கும் ராஜ்மோகன்குமார், ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகராக ராஜ்மோகன்குமார் கிடைத்துவிட்டார்.

Leave a Response