சபாநாயகர் முடிவு செல்லாது! -சுப்பிரமணியன் சுவாமி கருத்து

subramaniyan swamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று எம்எல்ஏக்கள் 19 பேர், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முன்பு நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

இந்த மனு கொடுத்தது தொடர்பாக செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அடிக்கும்படி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அளித்த காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்காததால், 18 எம்.எல்.ஏ.க்களையும் கட்சி தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்றும் தமிழகத்தில் 2 வாரத்திற்கு மட்டும் குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் இருந்து முடிவு வரும் வரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று கூறியுள்ளார்.

சட்ட நுணுக்கங்கள் நன்கு தெரிந்தவரும் வழக்கறிஞருமான சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரபரப்பை உருவாக்கியுள்ளது!

Leave a Response