ஸ்வாச்ஹதா ஹி சேவா இயக்கத்தில் இணைகிறார் மலையாள நடிகர்!

narendra-modi34-600

பிரதமர் மோடி நாட்டை தூய்மையாக வைத்திருக்கும் ஸ்வாச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி தீவிரமாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 15-ந்தேதி உத்தரப்பிரதேசம் சென்று இருந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக அடுத்த 2 வாரங்களுக்கு நாட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்வாச்தா ஹி சேவா’ பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அதன்படி, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி, ஸ்வாச்பாரத் திட்டத்தில் பங்கற்கும் படி அழைப்பு விடுத்துள்ளதாக கேரள பா.ஜனதா கட்சி கடிதத்தை வௌியிட்டது.

maganlal

அந்த அழைப்பை நடிகர் மோகன்லால் ஏற்றுக்கொண்டதாக தனது பேஸ்புக்கில் அறிக்கை வௌியிட்டார். இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ ‘பொறுப்புள்ள குடிமக்கள் என்ற முறையில் நாடுதான் நமது வீடு. வீடுதான் நமது அடையாளம் என்பதை நாம் புரிந்துகொண்டு அதன்படி நடந்து பெருமைப்பட வேண்டும்.
நான் ஸ்வாச்ஹதா ஹி சேவா இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கிறேன். இந்த இயக்கத்தில் ஆத்மார்த்தமாக பணியாற்றுவேன். புதிய இந்தியாவை ஒன்றாக இணைந்து உருவாக்குவோம்.

நாம் அனைவரும் தூய்மையான சூழலில் வாழ பழகிக் கொண்டால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் நம்முடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். இன்றிலிருந்து நமது நாட்டை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நாம் தீர்மானித்தால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த ஆண்டுகளைவிட சிறப்பானதாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஸ்வாச் பாரத் திட்டத்துக்கு வயது மூன்று

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி ஸ்வாச்பாரத்(தூய்மை இந்தியா) திட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது, மோடியே தனது கைகளால் துடைப்பத்தை பிடித்து சுத்தம் செய்து இளைஞர்களிடத்தில் உத்வேகத்தை புகுத்தினார். வரும் அக்டோபர் 2-ந்தேதி வந்தால், இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி, தொழில்துறையினர், நடிகர்கள், முன்னணி தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், மதத்தலைவர்கள், மற்றும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Response