பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

jurno_sub
கௌரி லங்கேஷ் இவர் ஒரு வார இதழின் முதன்மை ஆசிரியர். இவர் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். பின்னர் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர், சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்தில்தான் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமைகள் நடைபெறுகிறது. ஆனால், அதனைப் பெண்கள் மௌனத்துடன் கடந்து செல்கிறார்கள். அது தான் அச்சம் தருவதாக உள்ளது என்று எழுதியிருந்தார்.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 8.30 மணியளவில் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்த போது கௌரி லங்கேஷை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். கொலையாளிகள் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response