ராமநாதபுரத்தில் வீட்டின் அருகில் கழுத்து அறுக்கப்பட்டு ஆசிரியை கொலை !

teachar

ராமநாதபுரம் கோட்டைமேடு,கோழிக்கூட்டு தெருவில் வசித்துவருபவர் மோகன்ராஜன். இவரது மனைவி சண்முகப்பிரியா (40). ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், இன்று காலை தன் வீட்டுக்கு அடுத்துள்ள காலி இடத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய போலீஸார், சண்முகப்பிரியாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக, ராமநாதபுரம் காதர் பள்ளிவாசல் தெருவில் சலூன் கடை நடத்திவரும் சண்முகப்பிரியாவின் கணவர் மோகன்ராஜிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சண்முகப்பிரியாவுக்கு பொறியியல் கல்லூரியில் பயிலும் மகனும், பள்ளியில் பயிலும் மகளும் உள்ளனர். ஆசிரியை ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், ராமநாதபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response