அண்ணன் மகளை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த சித்தப்பா ! போலீஸ் வலைவீச்சு !

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகேசன் கஸ்தூரி தம்பதிகளின் மகள் மீனா என்ற மகள் உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். இதனையடுத்து பெற்றோரை இழந்த மீனாவை, மல்லூரில் உள்ள கஸ்தூரியின் பெற்றோர் வளர்த்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5 மாதத்திற்கு முன்பு நாயகன்பட்டியில் உள்ள தாத்தா குப்புசாமி, பாட்டி தீர்த்தம்மாள் ஆகியோர் மீனாவை அழைத்து வந்தனர். திருமணமாகாத அவரது சித்தப்பா வீராசாமியும் உடன் வசித்துள்ளார்.

இவர் அவ்வப்போது, சொந்த அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் மீனாவை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், இதையறிந்த கிராம மக்கள் அவரை மிரட்டி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை மீனாவின் தாத்தாவும், பாட்டியும் விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த மீனா காலை 10 மணியான போதும், வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, மீனா கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் சித்தப்பா வீராசாமி மாயமானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு, உடன்படாததால் மீனாவை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். சொந்த அண்ணன் மகள் என்று கூட பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு தலைமறைவான அவரது சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Response