‘அடேங்கப்பா’ பட்ஜெட்டில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்!

junga (6)

கிடைக்கிற வெற்றிகளில் மூழ்கிவிடாமல் அடுத்தடுத்த இலக்கு நோக்கி நிதானமாக அடியெடுத்து வைப்பவர் விஜய் சேதுபதி!

அவர் தயாரித்த முதல் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தினை தானே தயாரிக்கிறார்!

படத்தை கோகுல் இயக்குகிறார்! இவர் விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜீவா நடித்த ‘ரெளத்ரம்’, கார்த்தி நடிப்பில் வந்த ‘காஸ்மோரா’ படங்களை இயக்கியவர்!
படம் குறித்து கோகுலிடம் கேட்டோம். ‘‘ ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்று விஜய் சேதுபதி என்னிடம் கூறியிருந்தார். நான் அப்போது பொருத்தமான கதை உருவானவுடன் நானே வருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.

junga (2)

அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.

vijay-sethupathi-idhaaba-gokul

அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். ஏனைய தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை முன்னணி கலைஞர்கள் பலர் பணியாற்றவிருக்கிறார்கள். அவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் தெரிவிக்கிறேன்.

விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது.இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.’ என்றார் இயக்குநர் கோகுல்.

‘ஜூங்கா’விஒன் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வெளிவரும் என்கிறார்கள்!

Leave a Response