தமிழகத்தின் ஆளுநராகிறார் கல்ராஜ் மிஸ்ரா?

kalraj-mishra

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகவிருக்கும் பி.ஜே.பி. மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் சி.எச். வித்யாசாகர் ராவை, தமிழக பொறுப்பு ஆளுநராக மத்திய அரசு அப்போது நியமித்தது.

தற்போது பி.ஜே.பி. மூத்த தலைவரான கல்ராஜ் மிஸ்ரா, உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மக்களவைத் தொகுதியில் இருந்து 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உத்தரப்பிரதேச மாநில பி.ஜே.பி. தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காஸிப்பூர் மாவட்டம் மாலிக்பூர் பகுதியைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி-யின் வளர்ச்சிக்காக பெரிதும் பாடுபட்டவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட மிஸ்ரா, பாரதிய ஜனதாக் கட்சியின் இளைஞர் பிரிவான யுவ மோர்ச்சாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர்.

76 வயதான கல்ராஜ் மிஸ்ராவை தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிப்பதன் மூலம் தற்போதைய அரசியல் சூழ்நிலையை சற்றே சீர்செய்யலாம் என்று பி.ஜே.பி. தலைமை கருதுகிறது. மேலும், வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் நிரந்தர ஆளுநர் இல்லாவிட்டால், அது தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்ற நோக்கிலும் நிரந்தர ஆளுநரை நியமிக்க பி.ஜே.பி முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response