ஸ்ருதி, அக்சரா மட்டுமா? அனிதாவும் என் பொண்ணுதான்! கமல் உருக்கம்!

anitha1

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் பக்கத்தில்:-

மாணவி அனிதாவின் மரணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது : அனிதாவிற்கு நேர்ந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. தற்கொலை என்ற முடிவை எடுப்பதற்கு முன்னர் அவரின் மனம் எத்தனை வலியை கடந்திருக்கும் என்பதை என் மனது நினைக்கிறது. அனிதாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன் பேசுகையில்:-

‘இதைவிட அவலம் வேறு வேண்டுமா? அந்தப் பொண்ணு பேரு ஸ்ருதி, அக்ஷ்ரா என்று இருந்தால் மட்டும்தான் நான் கோபப்படணுமா? அனிதா எனக்கும் மகள்தான்.

இன்னும் இன்னும் கொடுமைகள் நடந்தால்தான் அரசுகள் தீர்வு தரும் என்றால் நீங்க வேண்டாம். நாங்களே பார்த்துக்கொள்கிறோம்.

நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். திருமாவளவன் பொங்கி எழவேண்டும். அவர் ஏன் வரவேண்டும் என்கிறேன் என்றால், ஒரு காரணத்துக்காகத்தான் சொல்கிறேன். அவர் நன்றாக கோபப்படுவார்.

அவர் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்து வெகுண்டு எழவேண்டும். மத்திய மாநில அரசுகள், நீதிமன்றங்கள் எல்லாம் நாம் வைத்ததுதான். அங்கே சென்று நன்றாக வாதாட வேண்டும், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசுகிறார்கள்.

இந்த விவாகரத்தில் அந்தப்பெண் எந்த ஊர், என்ன சாதி மதம் கட்சி என்றெல்லாம் பார்க்க கூடாது. பேதங்கள் கடந்து நியத்துக்காக நாம் அனைவரும் போராடவேண்டும். அனிதாவின் கனவு மண்ணோடு மண்ணாகிவிட்டது.

ஒன்று சேர்ந்து அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் ‘ என்று நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விஜய் சேதுபதி டுவிட்டர் பக்கத்தில்:-

அனிதாவின் துயரத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று நடிகர் விஜய்சேதுபதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என் சகோதரி அனிதாவின் பெற்றோருக்கும் குடும்பத்திற்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவர் பேசுகையில் :-

அப்போது, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மாணவி அனிதாவின் சாவுக்கு திமுக சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது அரசு, அரசாக இல்லை என்பதால் எதையும் எதிர்பார்க்க முடியாது.

மாணவி அனிதா, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அறிவாலயத்தில் என்னைச் சந்தித்ததார். 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடந்திருந்தால், மருத்துவ படிப்பில் மாணவி அனிதாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

துரைமுருகன் பேசுகையில்:-

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை நம்பி தமிழக அரசு ஏமாந்துவிட்டது என துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

டிவி தினகரன் டுவிட்டரில் அவர் கூறுகையில்:-

நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளாரே என்று அனிதாவின் துணிச்சலை எண்ணி மகிழ்ந்திருந்தேன்.

அவர் இத்தகைய முடிவை எடுப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அனிதாவின் மரணம் பெரும் இழப்பு. மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் இந்த தற்கொலைக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. முதல்வரும் எதுவும் கூறவில்லை.

அதிமுக மற்றும் பாஜக இந்த விஷயத்தில் ஒரே மாதிரியானவை. உ.பியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைககள் ஆக்ஸிஜன் இல்லாமல் இறந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பொறுப்பேற்கவில்லை, ஹரியானாவில் உருவாக்கப்பட்ட கலவரத்திற்கு அம்மாநில முதல்வரும் பொறுப்பேற்கவில்லை.

மாநில அரசின் உரிமைகளை காப்பதில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பார்த்து இவர்கள் பாடம் கற்க வேண்டும். ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது, இதற்காக என்னை இந்தியன் இல்லை என கூற முடியாது என தெரிவித்தார் சித்தராமையா. மாநில உரிமைகளை பறக்கவிட்டதன் விளைவுதான் அனிதா தற்கொலை என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

நீட் தேர்வுக்காக போராடிய போது யாரும் வாய் திறக்கலை போய்ச்சேர்ந்த பிறகு வருத்தம் தெரிவிக்கிறாங்கள்.

Leave a Response