மீண்டும் ’பெப்சி’ வேலைநிறுத்தம்; ’காலா’ ஷூட்டிங் கேன்சலா?

kaala

திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெப்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

வேலை நிறுத்தத்தையடுத்து காலா, மெர்சல் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கடந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக, பெப்சி சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்.

r.k

அதன்பின் நிலைமை சுமூகமாக இருந்துவந்தது. என்ன ஆனதோ தெரியவில்லை. இன்று மாலை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுக்குழு நடந்தது.

அந்த கூட்டத்தில் நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

mersal55

இந்த போராட்ட அறிவிப்பால் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் காலா, விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படப் பிடிப்புகள் பாதிப்பாகும் அபாயம் உருவாகியுள்ளது.

Leave a Response