போலீஸ் விசாரணையில் ‘தேனடை’ மதுமிதா!

mathu
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ‘அட தேனடை’ என்ற காமெடியில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகை மதுமிதா. இவர் பல சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.

தற்போது இவர், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உஷா என்கிற பெண்ணுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் உஷா, மதுமிதா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை அறிந்ததும் மீண்டும் மதுமிதா உஷாவிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு நிலையில் இருவருக்கும் சண்டை முற்றி மதுமிதா உஷாவின் கையை கடித்து குதறினார்.

மேலும் தற்போது இருவரும் தனித்தனியே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதில் மதுமிதா மீது தான் அதிகம் தவறு இருப்பதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகாரையும் பெற்றுக்கொண்ட போலீசார் இரத்தரப்பினரிடையேயும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Response