கவர்னர் கை விரித்தார்; ஜனாதிபதி என்ன செய்ய போகிறார்…

raamnath
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சந்தித்து பேசினர். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.பி.,க்கள் 23 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து சட்டசபை கூட்டிபெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கோரி வருகின்றனர்.

ஆனால், கவர்னர் எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதியை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 11 மணியளவில் எம்.பி.,க்கள் கனிமொழி, இளங்கோவன், திருச்சி சிவா, டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து அப்போது, சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிருபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கவர்னரை, ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Leave a Response