தமிழகத்தில் இலையை மறைத்து தாமரையை உதிக்கச் செய்ய மோடி, அமித் ஷாவின் மாஸ்டர் பிளான் பலிக்குமா? -ஒரு எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்…

amit-shah-modi-7591⁠⁠⁠
இந்த கட்டுரை சற்றே பெரிதுதான். நேரம் ஒதுக்கிப் படித்துப் பாருங்கள். தமிழக அரசியல் களத்தைச் சூழ்ந்திருக்கும் ஆபத்துகள் தெரியவரும்!

எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘அதிமுக ஆட்சி எப்போது கலையும்’ என்பதுதான் பேச்சாக இருக்கிறது.
எந்த சேனலைத் திருப்பினாலும் இவர் அவரை நீக்கினார், அவர் இவரை நீக்கினார் என்ற அறிவிப்புகளும் அவருக்கு நீக்க அதிகாரமில்லை, இவருக்கு நீக்க உரிமையில்லை என்ற பேட்டிகளும்தான்!

‘ஜெ மறைவையடுத்து ஓபிஎஸ் அணி, இபிஸ் அணி என பிரிந்தவர்கள் இணைந்தது அவரவர் சுயலாபத்துக்காக. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை’ என மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், ‘மக்களுக்கு நல்லது செய்வதற்காக, ஜெ ஆட்சியைத் தொடர்வதற்காகத்தான் இணைந்துள்ளோம்’ என வம்படியாய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த வெட்கக்கேடு சமாச்சாரம் ஒருபுறமிருக்க, தினகரன் தன் ஆதரவாளர்களை வைத்து ஓபிஎஸ் இபிஎஸ் வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறார். உற்றுக் கவனித்தால் தினகரனின் நிலைப்பாடு ஆட்சியைக் கலைப்பதோ அதிமுகவை கைப்பற்றுவதோ இல்லை என்பது புரியும்! அவரது நோக்கம் எடப்பாடிக்கு எதிரானதாகவே இருக்கிறது.
ops
ஒபிஎஸ் பொறுத்தவரை அவர் ஜெவின் செல்வாக்கை பெற்று அவர் காலத்திலேயே இருமுறை முதல்வரானவர். ஜெ மறைவுக்குப் பிறகும் முதல்வர் ஆனார். ஆனால், எடப்பாடிக்கு கிடைத்த முதல்வர் பதவியென்பது சசிகலா கொடுத்தது. அப்படியிருக்க இபிஎஸ் எடப்பாடியுடன் சேர்ந்து கொண்டு சசிகலாவை கட்சியிலிருந்து கழட்டிவிட நினைப்பதுதான் தினகரனை எடப்பாடிக்கு எதிராக உசுப்பேற்றியுள்ளது.
edapadi-palanasami8899-01-1493628537
அந்த வகையில் தினகரனின் நோக்கம் எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தங்களுக்கு ஆதரவான ஒருவரை முதல்வர் ஆக்கவேண்டும் என்பதாகவே இருக்கிறது. அப்படி ‘தனக்கு சாதகமான ஒருவர் முதல்வர் ஆகிவிட்டால் காலப்போக்கில் ஆட்சியும் கைவசம் இருக்கும். கட்சியும் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்’ என்று நம்புகிறார் அவர்!
dinakaranrs-condemn-letter-to-stalin-21
’தினகரனும் ஸ்டாலினும் சேர்வார்கள், ஸ்டாலின் முதல்வர் ஆவார்’ என்று வரக்கூடிய கருத்துகள் பயங்கரக் கேலிக்கூத்து. சசிகலாவை மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதே உண்மை நிலை. அவர் அணியுடன் கூட்டணி வைத்து தங்களுக்கு சமீபமாக வளர்ந்து வருகிற மக்கள் செல்வாக்கை கெடுத்துக் கொள்ள கண்டிப்பாக திமுக விரும்பாது. அதைத்தான் ஸ்டாலின் ‘திமுக கொள்ளைப் புறமாக ஆட்சியைப் பிடிக்காது’ என திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!

இந்த விஷயத்தில் ஸ்டாலினின் நிலைப்பாடு, ‘எப்படியும் இந்த ஆட்சி கலைந்து தேர்தல் வரும். அதில் திமுக தனித்துக் களமிறங்கினாலே மக்கள் செல்வாக்கை ஓட்டாக்கி குறைந்தது 150 சீட்டுகளை வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கலாம்’ என்பதுதான். 150க்கு மேற்பட்ட சீட்டுகள் கிடைக்கிறதோ இல்லையோ ஆட்சி அமைப்பதற்கான சீட்டுகள் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன!!

அதிமுகவை ஆட்டிப் படைக்கும் பிஜேபி இந்த வாய்ப்பை சுலபத்தில் ஸ்டாலினுக்கு தூக்கிக் கொடுத்துவிடுமா என்ன? முடிந்தவரை குழப்பம் ஏற்படுத்தவே செய்யும். எப்படியெல்லாம் குழப்பங்கள் ஏற்படுத்தலாம், என்னென்ன விதங்களில் காய் நகர்த்தலாம் என பிரதமர் மோடியும், பிஜேபி தேசியத் தலைவர் அமித்ஷாவும் சேர்ந்து தீட்டியிருக்கும் சகுனித்தன அரசியல் சூழ்ச்சிகள் மிகமிகப் பெரிது!!

பிஜேபியின் நோக்கம் அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதல்ல. பிஜேபியின் சார்பில் அதிக எண்ணிகையில் வேட்பாளர்களை களமிறக்கி கணிசமான சீட்டுகளைக் கைப்பற்றி சற்றே வலுவாக நாங்களும் தமிழக அரசியல் களத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டிக் கொள்வதுதான். இப்படி காட்டிக் கொள்ள ஆசைப்படும் பிஜேபி தனித்து தமிழகத்தில் போட்டியிட்டால் மக்கள் இருக்கிற வெறுப்புக்கு துடைத்துப் போட்டுவிடுவார்கள் என்பது தெரியும். இந்த நிலையில்தான் அதிமுகவின் ஆதரவு பிஜேபிக்கு தேவைப்படும்.

அதற்காக அதிமுகவின் குட்டையைக் குழப்பிக் கொண்டேயிருக்கும். இரட்டை இலையை மீட்க முடியாதபடி தன்னால் முடிந்ததை செய்துகொண்டேயிருக்கும்.

தேர்தல் வந்து அதிமுக களமிறங்கும்போது ‘இரட்டை இலை சின்னம் இல்லாமல் வேறு சின்னங்களில் போட்டியிட்டால் போனியாகாது’ என்பது அதிமுகவிற்கு நன்றாகவே தெரியும்! அதனால்தான் இரட்டை இலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலைக்கூட நடத்த பயந்து கொண்டிருக்கிறது.
ஓபிஎஸ் எடப்பாடி இணைந்ததன் நோக்கங்களில் முக்கியமானது தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருக்கும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதுதான்!

அதிமுக, இரட்டை இலை சின்னத்தை மீட்டு தேர்தலில் போட்டியிட்டால் திமுகவை மிஞ்சமுடியாவிட்டாலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கான தகுதியையாவது பெறக்கூடும். இரட்டை இலை சின்னம் கிடைத்து, அதிமுக ஜம்மென போட்டியிட்டு எதிர்க்கட்சி வரிசைக்கு வந்து, திமுக ஆட்சியமைத்துவிட்டால் பிஜேபி எங்கே போவதாம்! என்ன செய்வதாம்!

இப்படி நடந்து விடக்கூடாது என்பதில் பிஜேபி கவனமாக இருந்து காய் நகர்த்தும். அதிமுகவில் ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். பொன்னாரை தூதுவிட்டு அதிமுகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், முன்னாள் மேயர் கார்த்தியாயினி உள்ளிட்டோரை சமீபத்தில் பிஜேபிக்குள் இழுத்துப் போட்டதுபோல் இன்னும் சில முக்கியப் புள்ளிகளை தங்கள் வசமாக்கிக் கொள்ளும்! இப்படி ஏதோவொரு விதத்தில் அதிமுகவில் குழப்பங்கள் தொடரும்படி பார்த்துக் கொண்டால் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் விடுவிக்காது!
an karth
இந்த சூழ்ச்சி தெரியாதவாறு அதிமுக எம்.பி.க்களில் 2, 3 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து ‘நாங்கள் உங்களுக்குச் சாதகமானவர்கள்’ என பிஜேபி நல்லவனாக அதிமுகவிடம் காட்டிக் கொள்ளும்!
இந்த நேரத்தில்தான் சரியாக ஆட்சிக் கலைப்பு சம்பவம் நடந்தேறும். சிலபல காரணங்களால் ஆட்சி தானாகவே கலையும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு பிஜேபி அமைதி காக்கும்! குரூர சிரிப்புடன் வேடிக்கை பார்க்கும்!

என்ன நடந்தாலும் வரப்போகிற தேர்தலில் அதிமுகவுக்கு பிஜேபியுடன் தான் கூட்டணி!! அதில் மாற்றமில்லை. கூட்டணி அமைக்கும்போது தங்களுக்கான இரட்டை இலை சின்னம் இல்லாத நிலையில் அதிமுக கையைப் பிசையும்போது கலங்காதீர்கள், நம்முடைய தாமரை சின்னத்திலேயே எங்கள் ஆட்களும் அதிமுக ஆட்களும் அதாவது வேட்பாளர்களும் போட்டியிடலாம் என தோளில் கை போடும்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையிலிருக்கும் அதிமுக அப்போது தலையாட்டும். ஆட்டுவதை தவிர வேறு வழியிருக்காது அவர்களுக்கு!

தாமரை சின்னத்தில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிடும்போது கணிசமான இடங்களைக் கைப்பற்றுவது சாத்தியமான ஒன்றுதான். இந்த வகையில் தமிழ்நாட்டுக்குள் கால் பதிக்கும் பிஜேபி கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை மூளைச்சலவை செய்து பிஜேபியில் அதிமுகவை இணைக்கும்படி செய்துவிடும்.
tow leaf 2
அதாவது ஒருங்கிணைந்த அதிமுக _ பிஜேபி!! திமுக பொறுத்தவரை ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் நிச்சயம் வெல்வதில்லை. அந்த வகையில் அடுத்த தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக பிஜேபி போட்டியிட்டால் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது. அதிமுகவுக்குள் பல்வேறு குழப்பங்களை உருவாக்கி பிஜேபி குளிர்காய்வதில் இருக்குற பிஜேபியின் தொலைநோக்குப் பார்வை அரசியல், மோடியும் அமித்ஷாவும் வகுத்திருக்கும் அரசியல் சூழ்ச்சியும் இதுதான்!

இதைப்படிக்கும்போது தலை சுற்றுவதுபோலிருக்கும். ஆனால் நடக்கப்போவது இதுதான்! பொருத்திருந்து பாருங்கள்!

ஆகக்கூடி அதிமுக உடனடியாக கலையாது என்பதே இப்போதைக்கு இருக்கிற நிலை!

Leave a Response