சசிகலா பதவிக்கு ஆப்பு! பொதுக்குழுவில் அரசியல் வாழ்க்கைக்கு மூடுவிழா!!

pothu

செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டப்பட்டு, பொதுச்செயலர் பதவியில் இருந்தும், அ.தி.மு.க.,வில் இருந்தும், சசிகலா நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவை அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. ஆனால் சசிகலா முதலமைச்சராக முயன்றபோது, அந்த சந்தர்ப்பத்தில் அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டது.

இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓ.பி.எஸ். அணியினரின் கோரிக்கைகளை எடப்பாடி அணி ஏற்றுக் கொண்டதையடுத்து இரு அணிகளும் இணைந்தன. ஓபிஎஸ். துணை முதல்வரானார்.

ops-eps

ஓ.பி.எஸ். அணியினரின் முக்கிய கோரிக்கை சசிகலாவை அதிமுக.வில் இருந்து நீக்கவேண்டும் என்பது. அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக செப்டம்பர் 15
பொதுக்குழு கூடவிருக்கிறது. அதில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் படலம் நடக்கவுள்ளது.

sasikalala

முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு முதல் ஆப்பு என்றால் பொதுக்குழுவின் இந்த முடிவு அவரது அரசியல் வாழ்க்கையையே முடித்து வைப்பதாக இருக்கும்!

Leave a Response