மினி பஸ் மாதிரி மினி விமான சேவை; ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது

air-india (1)
ஏர்- இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனம் வருகிற 30 ஆம் தேதிமுதல் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, விஜயவாடா மற்றும் சிறு நகரங்களுக்கு தினசரி விமான சேவை தொடங்கப் போவதாக தென்மண்டல ஏர்-இந்தியா விமான நிறுவன இயக்குனர் கேப்டன் அருள்மணி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்:-

‘‘பெரிய நகரங்களுடன் சிறிய நகரங்களை இணைக்கவும் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்யும் வகையில் நியாயமான கட்டணத்தில் விமானங்கள் இயக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளதால் மக்கள் பயனுரும் வகையில் இந்த சேவையை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்த விமான சேவையில் 70 பேர் பயணிக்கும் சிறிய ரக விமானம் இயக்கப்படும்!

இதில் ஒரு நாளைக்கு ஒரு நகரத்திற்கு ஒரு முறை மட்டுமே விமான சேவை அளிக்க இயலும். மேலும் சிறிய ரக விமானங்கள் வந்த பின்னர் காலை, மாலை என தினமும் 2 முறை விமான சேவை வழங்க திட்டமிட்டுள்ளப்பட்டுள்ளோம்!

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும். பயணிகளின் ஆதரவை பொறுத்தே விமான சேவை அதிகரிப்பது பற்றி முடிவு செய்யப்படும்!’’

Leave a Response