அதிமுக இரு அணிகள் இணைந்தது ! பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சராக பதவி

adimak

இன்று காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருக்கின்றன.

அணிகள் இணைந்ததும், ஓபிஎஸ் கட்சி நிர்வாகத்தையும், முதல்வர் பழனிசாமி ஆட்சியையும் கவனித்துக் கொள்வார். கட்சியை நிர்வகிக்கக் குழு அமைக்கப்படும். குழுவின் தலைவராக ஓபிஎஸ் இருப்பார். அக்குழுவில் முதல்வர் பழனிசாமியும் முக்கிய பொறுப்பில் இருப்பார். இரு அணிகளைச் சேர்ந்த முக்கியமானவர்கள் அந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர். அமைச்சரவையில் ஓபிஎஸ் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படுகிறது.

கட்சியை வழிநடத்த அ.தி.மு.கவில் வழிகாட்டுதல் குழு. இதில் 11 பேர் இடம் பெறுவர்-எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.

இது தொடர்பாக விரைவில் ஆளுநரைச் சந்தித்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும். இரு அணிகளும் இணைந்ததும், ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவது, அதற்கு முன்னதாகக் கட்சி சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வருவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

pannerselvam

தற்ப்போது அணிகள்:-

தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கைகோர்த்து அணிகளை இணைந்தனர்.

தற்ப்போது அவர்கள் மறந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்திற்கு செல்ல உள்ளனர். அதன் பிறகு பதவியேற்க செல்வார் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.

அதில் துணை முதலமைச்சராக பன்னீர்செல்வமும், மாஃபா பாண்டியரஜனும் எந்த துறை அமைச்சர் என தெரியவில்லை.

கட்சியை வழிநடத்த அ.தி.மு.கவில் வழிகாட்டுதல் குழு. இதில் 11 பேர் இடம் பெறுவர்-எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பர்.

Leave a Response