களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை மட்டுமே கடலில் கரைக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

eco friendly
வரும் 25 -ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கடலில் கரைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

நீர் நிலைகளைப் பாதுகாக்க, சுற்றுச்சூழலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும். பொதுமக்கள் மற்றும் விநாயகர் சிலைகளைச் செய்யும் கலைஞர்கள் நீர் மாசு ஏற்படுத்தாத பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும் களிமண், கிழங்கு மாவு போன்ற சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருள்களாலான விநாயகர் சிலைகளை தயார் செய்ய வேண்டும். நீரில் கரையும் தன்மையுடன்கூடிய தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response