நாளை பைனலுக்கு செல்லும் ‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ்’

super_2952451f
டிஎன்பிஎல் டி20 தொடரின் 2வது குவாலிபயர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. திருநெல்வேலியில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்ய கோவை கிங்ஸ் அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு வீஜேடி முறையில் 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 11 ஒவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்த நிலையில், கில்லீஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட் அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர்கொள்ள உள்ளது.

Leave a Response