சிறையில் பிறந்தநாள் கொண்டாடும் சசிகலா; கோவில்களில் சிறப்பு பூஜை !

sasikala
சசிகலாவின் பிறந்தநாளுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லி பரிசு கொடுக்கும் அவரது உயிர் தோழி ஜெயலலிதா இந்த ஆண்டு இல்லை என்பது மிகவும் சோகமான விசயம். அதோடு அதிமுக பொதுச்செயலாளரான பின்னர் வரும் முதல் பிறந்தநாளை சிறையில் கொண்டாடுகிறார் சசிகலா.

ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்தி பிளக்ஸ் பேனர் வைப்பார் விருதுநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன். மாணவர் அணி நகரச்செயலாளராக இருந்த இவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது சசிகலா பேரவை என்று ஒரு அமைப்பை புதிதாக தொடங்கி, தன்னை சசிகலா அனுதாபியாக காட்டிக்கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், சசிகலா பிறந்தநாளின்போது விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சசிகலாவுக்கு மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, பிளக்ஸ் போர்டு வைப்பார்.

சசிகலாவை வீட்டை விட்டு ஜெயலலிதா வெளியேற்றியபோது கடந்த சில ஆண்டுகளாக கணேசன், சசிகலாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் போர்டு வைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, இருந்த போது சசிகலாவிற்கு மீண்டும் பிளக்ஸ் போர்டு வைத்தனர், இதனை தொடர்ந்து சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஆண்டு சசிகலா பொதுச்செயலாளராக இருப்பதால் பிரம்மாண்டமாக அவர் பிளக்ஸ் வைக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

சசிகலாவின் பிறந்தநாளான இன்று அவரது உறவு சொன்னால் இளவரசி மட்டுமே உடன் இருக்கிறார். டிடிவி தினகரன் பெங்களூருவிற்கு சென்று நேரடியாக வாழ்த்து கூற உள்ளார்.

அதுமட்டுமல்லாது சசிகலாவிற்கு கர்நாடகாவில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனராம். இதேபோல மன்னார்குடியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல போயஸ் தோட்ட வீட்டையும் அரசு நினைவில்லமாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர். இந்த அறிவிப்புகள் சசிகலாவிற்கு அதிர்ச்சியளிக்கக்கூடியவையே.

கடந்த 6 மாத காலமாக சிறைக்குள் இருக்கும் சசிகலா. கடந்த 2015ஆம் ஆண்டும் சிறைக்குள் பிறந்தநாளை கழித்த சசிகலா, இந்த ஆண்டும் சிறைக்குள்ளேயே சோகத்தோடு பிறந்தநாளை கொண்டாடப்போகிறார்.

Leave a Response