ரோஹித் வேமுலா தலித் அல்ல! விசாரணைக் கமிஷன் அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

Rohith Vemula

ஹைதரபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர் ரோஹித் வேமுலா மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் அவர் 2016 – ஆம் ஆண்டு ஜனவரியில் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணை கமிஷன் வேமுலாவின் தற்கொலை சம்பவத்தை விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏகே ரூபன்வால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

rohit-vemula345

இறந்து ஒராண்டுக்கு மேல் ஆகும்நிலையில் தற்போது ரூபன்வால் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில் அவர் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின்படி மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், விசாரணை கமிஷனின் அறிக்கையின்படி ரோஹித் வேமுலாவை யாரும் கொல்லவில்லை. அவரை தற்கொலைக்கு யாரும் தூண்டவில்லை. அவரது இறப்புக்கு அவரே காரணம்.

சொந்த பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலை செய்துக் கொள்வதாக ரோஹித் வேமுலா இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு வேளை பல்கலைக்கழகத்தின் நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவர் அதை கடிதத்தில் குறிப்பிட்டிருந்திருப்பார்.

தலித் அல்ல:-

மேலும் இந்த அறிக்கையின் மூலம் ரோஹித் வேமுலா தலித் அல்ல என்றும் அவர் ஓபிசி வகுப்பை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் விசாரணை கமிஷனின் பரிந்துரைகளை பின்பற்றுவோம் என்று மத்திய மனிதவள மேம்பாடு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Response