முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றுள்ளார் சினிமா பைனான்சியர்!

anbu2

சென்னையில், பிரபல இயக்குனர் சசிகுமாரின் அத்தை மகனும், சினிமா தயாரிப்பாளருமான, அசோக்குமார், நவ., 21ல், தற்கொலை செய்தார். தன் மரணத்திற்கு, கோலிவுட்டில் கந்துவட்டி வசூலித்து வரும் பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என, கடிதமும் எழுதி வைத்திருந்தார்.

தலைமறைவு அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, வளசரவாக்கம் போலீசார், அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பதால், அவரை கைது செய்ய, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார், ஐதராபாத் மற்றும் தேனியில் முகாமிட்டுள்ளனர்.

su3

இதனிடையே, அசோக்குமார் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலாளர்களிடம் விசாரணைஅதில், அன்புச்செழியனின் மேலாளர்களான சென்னை, அசோக்நகரைச் சேர்ந்த முருகசுந்தரம் 50 வயது, வளசரவாக்கத்தைச் சேர்ந்த சாதிக்பாஷா 49வயது ஆகியோர், அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார், இரு தினங்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்துவட்டி வழக்கு பதிவு விசாரணையில், அன்புச்செழியன் துாண்டுதலின்படி, இருவரும், அசோக்குமாரிடம், கந்துவட்டி கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, அன்புச்செழியன் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை மாற்றி, நேற்று கந்துவட்டி வசூலிப்பு சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அன்புச்செழியன் மற்றும் அவரது மேலாளர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த அன்பு செழியன் திடீரென அதை தன் வக்கில் மூலம் இன்று வாபஸ் பெற்றுள்ளார்.

Leave a Response