மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு

mettur-dam13
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால் மேட்டூர்அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை 10,535 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 21,947 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் அணையின் இருப்பு 17.046 டிஎம்சியாக உயர்ந்துள்ள நிலையில் வினாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3.06 அடி உயர்ந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.17 அடியாக உள்ளது.

கிட்டதட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 40 நாள்களில் அணை முழுகொள்ளளவை எட்டிவிடும்.

நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு இன்று மாலை நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு அறிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response