ஜெயலலிதா மரணம், நீதி விசாரணைக்கு தயார்! திவாகரன் மகன் அறிவிப்பு

jayalalaithaa
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதவின் மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடலாம் என திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை யாருமே சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜெயலலிதாவின் அருகே இருந்த சசிகலா மற்றும் டாக்டர்கள் தவிர அவரை பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பலதரப்பினர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரனின் மகன் ஜெயானந்த், ஜெயலலிதா மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை என்றும், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால், வீடியோ ஆதாரங்களை தரத் தயார் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை நீதிபதி முன்பு சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Response