எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : இது வெற்றி அல்ல, அதிமுகவிற்கே இழப்பு – திவகாரன்..!

18 எம்.ஏல்.ஏக்கள் விவகாரத்தில் வெளியான தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பீதியிலேயே இருந்து வந்தது. ஆனால், தற்போது தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வந்துவிட்டதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இது தற்காலிகம்தான். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இடைத்தேர்தலை சந்தித்தால் அங்கு அவர்களோ அல்லது திமுக வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்புண்டு.

எனவே, இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என அரசியல் விமர்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த திவாகரன்.

“இந்த திர்ப்பு எடப்பாடிக்கு வெற்றி அல்ல. ஜெயலலிதா வென்றெடுத்த 18 தொகுதிகளை அதிமுக இழந்துள்ளது. எனவே, இந்த வழக்கின் தீர்ப்பால் அதிமுகவிற்குதான் இழப்பு. டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response