இன்று துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் வெங்கைய நாயுடு!

venk
துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, பா.ஜ.க சார்பில் வெங்கைய நாயுடுவும், எதிர்க்கட்சி சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரும் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இதில், வெங்கைய நாயுடு வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர் அமித் ஷா, பா.ஜ.க மூத்த தலைவர்கள், தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தப் பதவியேற்பு விழா, தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.

Leave a Response