ஒயின்ஷாபில் விற்பனையாளராக முதல் பெண் நியமனம்!

kerala12

கேரளாவில் முதன்முதலாக பெண் ஒருவர் அரசு மதுக்கடையில் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் அரசு மதுபான விற்பனை கழகம் மூலம் 350க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் ஆண்கள் மட்டுமே விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் எழுத்துத்தேர்வு மூலமே பணியமர்த்தப்படுவர்கள். கடந்த 2010ம் ஆண்டில் நடந்த எழுத்துத்தேர்வில் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி என்ற பெண் உட்பட 8 பேர் தேர்வு பெற்றனர். ஆனால் பெண்கள் என்பதால் அவர்கள் விற்பனையாளர்களாக நியமிக்கப்படவில்லை.

kerala123

இதையடுத்து ஷைனி உட்பட 8 பேரும் இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள உயர் நீதிமன்றம் அரசு பணியில் ஆண், பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது. தேர்வில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

தொடர்ந்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஷைனி அப்பகுதியில் உள்ள அரசு மதுபான விற்பனை கூடத்தில் விற்பனையாளராக நேற்று பணியில் சேர்ந்தார். மற்ற பெண்களுக்கும் உடன் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response