ஓ.பி.எஸ்.க்கு இப்படி ஒரு சோதனையா !

ops
நீட் தோ்வு விவகாரம், குடிநீா் பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்னைகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மந்தமான போக்கை கடைப்பிடிப்பதாக சொல்லி முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா் செல்வம் தலைமயிலான புரட்சித் தலைவி அணியினா் வருகிற 10ம் தேதி சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.

சுதந்திரதினம் வருவதை காரணம் காட்டி போராட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி வழங்கவில்லை.
அதிா்ச்சியடைந்த புரட்சித் தலைவி அணியினா் போராட்டம் வருகிற 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனா். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அவைத் தலைவா் மதுசூதனன் தலைமை வகிப்பாா் என்றும், ஓ. பன்னீா் செல்வம் முன்னிலை வகிப்பாா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு போராட்டம் மூலம் எதிா்ப்பு தொிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போராட்டம் காலம் தாழ்ந்த ஒன்று என்றும், கண்துடைப்பு நடவடிக்கை என்றும் எதிா்க்கட்சி சாா்பில் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Leave a Response