உ.பி.யின் தெய்வீக நகரங்களான வாரணாசி மற்றும் மதுராவில் விதவைகள் அதிகமாக வசிக்கிறார்கள். இவர்கள், மேற்கு வங்கம் உட்படப் பல்வேறு மாநிலங்களில் இருந்து விதவைகள் ஆனதால் மதுராவுக்கு அனுப்பப்பட்டவர்கள். சமூகத்தின் பொது வைபவங்களில் இருந்து விலக்கப்பட்டிருந்தவர்களுக்கு, ஓரிரு ஆண்டுகளாக அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் பல்வேறு ராக்கி கயிறுகளைச் செய்து, மதுராவின் பிருந்தாவனில் உள்ள புகழ்பெற்ற கோபிநாத் கோயிலில் விதவைகள் கட்டி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த முறை அவர்கள் பிரதமர் மோடிக்கும் 1500 சிறப்பு ராக்கிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
அவையனைத்தும் அந்த விதவைகளின் கைகளால் சிறப்பு கவனம் எடுத்து பிரதமருக்காக செய்யப்பட்டவை. அவர்களின் சார்பில் 10 பேர், 94 வயது மனு கோஷ் தலைமையில் ராக்கி கயிறுகளை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மதுராவின் ‘சுலாப் இண்டர்நேஷனல்’ செய்துள்ளது.