சென்னையில் தமிழக சட்டப்பேரவையை பாஜக இளைஞர் அணியின் சார்பாக இன்று பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக மக்களவை உறுப்பினர் பூனம் மகாஜன் இன்று சென்னை வந்துள்ளார்.
பாஜக இளைஞர் அணிக்குத் தலைவராக உள்ள பூனம், இவர் மறைந்த முன்னாள் பாஜக தலைவரான பிரமோத் மகாஜனின் மகள் ஆவார்.
சென்னை வந்தததும் அவர் நடிகர் ரஜினிகந்தை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ரஜினியுட்ன எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பூனம் வெளியிட்டிருக்கிறார். அவரது இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது மட்டுமே என்று அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.