இரும்புச் சத்து பற்றாக்குறை… என்னென்ன சாப்பிடவேண்டும்?

dry

இரும்புசத்து ஹிமோகுளோபின் உற்பத்திக்கும் மூளையின் செயல் பாட்டிற்கும் உடல் பாதுகாப்பிற்கும் அவசியம்.

இரும்பச்சத்து பற்றாக்குறைவால் இரத்த சோகை ஏற்பட நேரிடும். இரும்பு சத்து குறைவால் ஏற்படும் இரத்த சோகை குழந்தை பெறும் வயதுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படுகின்றது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்புசத்து குறைவு தாய்மார்களின் இறப்பு விகிதத்தை அதிகரிப்பதுடன் எடை குறைந்த குழந்தைகள் பிறப்பதற்கும் காரணமாக உள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு நோய்கள் ஏற்பட ஏதுவாகின்றது மற்றும் அவர்களின் கற்கும்திறன் கூட பாதிக்கப்படுகிறது .

kirai

தாவர வகை உனவுகளான பயறு வகைகள் உலர் பழங்கள் கீரைவகைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இரும்புசத்து மாட்டிறைச்சி மீன் மற்றும் கோழி இறைச்சிகளில் இருந்தும் கிடைக்கின்றது.
தாவர வகை உணவில் இரும்புச்சத்து குறைவாக காணப்படுகின்றது . ஆனால் மாமிச வகைகளில் அதிகமாக உள்ளது.

kova

வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ள நெல்லிக்கனி, கொய்யா மற்றும் சிட்ரஸ் அமிலம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரும்புச்சத்து ஈர்த்துக் கொள்வதை அதிகப்படுத்துகின்றன.

உற்சாக பானங்களான டீ போன்றவை உடலில் இரும்புச்சத்து ஏற்புத்திறனை தடுக்கிறது. எனவே உணவு அருந்தும் போதே, முன்போ, அல்லது அதன் பின்போ , டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா

Leave a Response