செப்டம்பர் 7ல் ஆரம்பமாகும் சர்வர் சுந்தரத்தின் அட்டகாசமான பணிவிடை

Santhanam-Server-Sundharam-First-Look-Released-765x510
‘விவேகம்’ படத்திற்காக வெளியாகாமல் ஒதுங்கியிருந்த படங்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக தங்களுடைய ரிலீஸ் தேதியை வெளிட்டு வருகிறது. அதுபோல் ஒதுங்கியிருந்த படம் தான் ‘சர்வர் சுந்தரம்’. இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் 7-ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார்.

மராத்தி நடிகை வைபவி ஷாண்டில்யா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சென்னை, கோவா, தென்காசி மற்றும் துபாயில் நடத்தப்பட்டுள்ளது. நிதிநெருக்கடியில் சிக்கியிருந்த ‘சர்வர் சுந்தரம்’ தற்போது சரியாகி செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response