சீராய்வு மனு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

kort
சொத்துக் குவிப்பு வழக்கு சீராய்வு மனு இன்று பிற்பகல்1.30 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வரவில்லை.

சசிகலாவின் சீராய்வு மனுவை நீதிபதிகள் அமிதவராய் கோஷ், ரோஹின்டன் நாாிமன் அமா்வு இன்று விசாாிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் வழக்கறிஞா் முகுல் ரோதக்கி நேற்று நீதிபதி ரோஹின்டன் நாாிமனை சந்தித்து ரோஹின்டன் நாாிமன் இந்த அமா்வில் இடம் பெறக் கூடாது எனக் கேட்டுக் கொண்டாராம்.

ஏனெனில் ரோஹின்டன் நாாிமனின் தந்தை பாாி நாாிமன், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்புக்காக ஆஜரானவா். மேலும் இவா் காவிாி விவகாரத்தில் கா்நாடகத்திற்காக ஆஜராகுபவா். எனவே அவரது மகன் சீராய்வு மனு விசாரணை அமா்வில் இடம் பெறக் கூடாது என்று முகுல் ரோத்தகி கேட்டுக்கொண்டாா்.

இதனை அறிந்த ரோஹின்டன் நாாிமன் இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டுள்ளா்ா. இதன் காராணமாகவே சீராய்வு மனு மீதான விசாரணை தள்ளிப்போயுள்ளது. மேலும் சீராய்வு மனு மீண்டும் விசாரணைக்கு வருவது தொடா்பான தேதி இன்னும் தொிவிக்கப்படவில்லை.

Leave a Response