சூப்பர் ஸ்டார் சொல்வதை பெப்சி அமைப்பு ஏற்குமா?

rk sevamai

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்சி அமைப்பினருக்கும் பல்வேறு காரணங்களால் மோதல் வெடித்தது. அதன் காரணமாக பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பெப்சி தலைவர் இயக்குநர் ஆ.கே. செல்வமணி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

சந்திப்பு முடிந்த பிறகு ரஜினியிடமிருந்து அறிக்கையொன்று வந்துள்ளது. அதில் “எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று ‘வேலைநிறுத்தம்’. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்” இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்!

Leave a Response