மானிய விலை அரிசி, கோதுமை விலையில்…. இப்போதைக்கு மாற்றம் கிடையாது ராம்விலாஸ் பாஸ்வான் அதிரடி

kothumai
நாட்டின் 81 கோடி மக்கள் பயன்பெற்று வரும் மானிய விலையான கோதுமை ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்பது 2018-ம் ஆண்டு வரை தொடரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உறுதி அளித்துள்ளார்.

உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் கூறும்போது, 2013-ம் ஆண்டு தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உணவு தானியங்களின் விலைகளை மாற்றலாம், ஆனால் 2018 வரை நடப்புத் திட்டத்தை தொடர முடிவெடுத்துள்ளோம்.

மத்திய அரசின் திட்டங்களை சரிவர அமல் செய்து யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

நாட்டில் உணவு தானியங்கள், பொருட்களைச் சேமிப்பதற்காக தனியார் தொழில்முனைவோர் உத்தரவாத திட்டம் 2008-09-ல் உருவாக்கப்பட்டு கிடங்கு கட்டுமானங்களுக்கு வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

எனவே 2018 வரை மானிய விலை அரிசி, கோதுமை ஆகியவற்றில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response