பனமரத்துப்பட்டி நாகதேவதை கோவிலில் சிறப்பு ஹோமம் !

Photo0207
பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டியில் உள்ள, இச்சாதாரி நாகதேவதை கோவிலில், கடந்த, 23ல் உலக நன்மைக்காக சக்தி ஹோமம், 24ல் பூர்வஜென்மம் சாப நிவர்த்தி ஹோமம், 25ல் நாகதோஷ நிவர்த்தி பரிகார ஹோமம், 26ல் நீண்ட நாள் வாழ சுயம்வரா பார்வதி ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம், நாக சதுர்த்தியை முன்னிட்டு, ஹோம பூஜை மற்றும் நாகதேவதை அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் விலகி, திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி, புற்றுக்கு பால் ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.

நேற்று, நாக மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு, நாக தேவதைக்கு பால், தயிறு, தேன், சந்தனம், கரும்புசாறு பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட, 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. ஹோம குண்டத்தில், பால், பழம், மூலிகை குச்சிகளை போட்டு, பக்தர்கள் வணங்கினர். அன்னாசி, சாத்துக்குடி, மாதுளை, சப்போட்டா, எலுமிச்சை, தேங்காய், மாம்பழம், பூசணி ஆகியவையில், நெய் விளக்கு ஏற்றி, பக்தர்கள் வேண்டுதல் வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில், நாகதேவதை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Leave a Response