வேலூரில் 50 நாட்களில் ரூ.15 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் !

paan
வேலூர் மாவட்டத்தில், 50 நாட்களில், 15 லட்சம் ரூபாய் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து சென்னை, வேலூருக்கு சென்ற அரசு பஸ்களில், கடத்தப்பட்ட, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் போன்ற போதைப் பொருட்களை, வேலூர் மாவட்ட உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த, 12ல், பறிமுதல் செய்தனர். இதற்கு விளக்கம் கேட்டு, 10க்கும் மேற்பட்ட அரசு பஸ் கண்டக்டர், டிரைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கடந்த, 50 நாட்களில், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருட்கள் விற்பனையை கண்டறிய, மாவட்டம் முழுவதும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response