திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனம் ரத்து!

thiruppathi

அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி இரவு 10.52 மணியில் இருந்து நள்ளிரவு 12.48 மணிவரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கோவிலின் அனைத்துக் கதவுகளும் சாத்தப்பட்டு, மறுநாள் (8-ந்தேதி) அதிகாலை 2 மணிக்கு கோவிலின் கதவுகள் திறக்கப்படுகின்றன.

இதையடுத்து கோவிலை சுத்தம் செய்து மூலவர் வெங்கடாஜலபதிக்கு புண்ணியாவதனம், நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து இலவச தரிசனம், திவ்ய தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ஆகியவற்றில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

ஏழுமலையான் கோவிலில் விசேஷ பூஜை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.மேலும் தோமால சேவை, அர்ச்சனை சேவை ஆகியவை ஏகாந்தமாக (பக்தர்களுக்கு அனுமதியின்றி) நடக்கிறது.

Leave a Response