ஜுலை 28ல் நடு பென்ச் மாணவர்களைப் பற்றிய கதையில் வெளியாகும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’

nivas
டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ரமணீயம் டாக்கீஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.
“இந்தப் படத்தில் முதலில் மலையாள நடிகர் நிவின் பாலிதான் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவரால் இந்தப் படத்திற்காகத் தேதிகளை ஒதுக்கி நடிக்க முடியவில்லை. அதன் பின்தான் அசோக் செல்வன் இந்தப் படத்திற்குள் வந்தார். ஏற்கனவே முதல் பென்ச் மாணவர்களைப் பற்றியும், கடைசி பென்ச் மாணவர்களைப் பற்றியும் படங்கள்
வெளி வந்துள்ளன. அதனால் இப்படம் நடு பென்ச் மாணவர்களைப் பற்றிய கதையாகும். இந்தப் படத்தின் நாயகன் நடு பென்ச் மாணவன். அப்படிப்பட்ட ஒரு மாணவனுடைய நிலைமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் அசோக் செல்வன்,.

இப்படத்தில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ் ஆர்.பிரகாஷ் பாபு, நாயகி பிரியா ஆனந்த், சமுத்திரகனி, நாசர், பால சரவணன், அனுபாகுமார், ஜான் விஜய், நடித்துள்ளனர். இப்படத்தின் P.K.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம் ஜுலை 28ம் தேதி வெளியாகிறது.

Leave a Response