காட்டெருமைகளின் அட்டகாசம்! விவசாய பயிர்கள் நாசம்!

yaruma

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் மணத்தோண்டி, பிடாரம்பட்டி, புலவணாகுடி, கங்காணிப்பட்டி, சொக்கநாதபட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தின் மையப்பகுதியில் காவக்காடு என்ற வனப்பகுதி உள்ளது. இந்த காட்டுப்பகுதியில் இருந்து பல்வேறு வகையான விலங்குகள் சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயப்பயிகளை நாசம் செய்து வருகிறது. தற்போது மின்மோட்டாரை கொண்டு பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர் மற்றும் கத்திரி செடிகளை காட்டெருமைகள் வந்து நாசம் செய்து வருகிறது.

dr

இரவு நேரத்தில் கூட்டமாக வருவதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே வனத்துறையினர் இதில் தலையிட்டு காட்டெருமை, குரங்கு, மான்கள், இவைகளிடம் இருந்து விவசாய பயிர்களை நாசம் செய்யாதவாறு அரண்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு பகலாக கண் விழித்து தண்ணீர் பாய்ச்சி நெல் நடவு செய்து நல்ல முறையில் வளர்த்து வந்தேன். திடீரென 15க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் வந்து நெற்பயிகளை தின்று நாசப்படுத்திவிட்டது.

தமிழக அரசாங்கம் இந்த விலங்குகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் ஊர் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Response