உலக அளவில் ‘விவேகம்’ படத்தின் டீசர் சாதனை!

vivegam

அஜீத் நடித்து வரும் ‘விவேகம்‘ அடுத்த மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் பல சாதனைகள் புரிந்துள்ளன. தற்போது 5,05,326 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

முதலிடத்தில் ‘ஸ்டார்வார்ஸ்’ திரைப்படம் 5,62,008 லைக்குகளுடனும், 2வது இடத்தில் ‘அவென்ஜர்ஸ்’ திரைப்படம் 5,22,053 லைக்குகளுடனும், 3வது இடத்தில் ‘விவேகம்’ திரைப்படம் 5,05,326 லைக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

‘விவேகம்’ படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாகவுள்ளது. டீசரை போலவே இந்த படத்தின் டிரைலரும் உலக அளவில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response