மகளிர் சிறப்பு ரயில் நிலையம் !

Tamil_News_large_178806220170611063639
மும்பை, முழுவதும் பெண்களே பணிபுரியும், நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமையை, மும்பையில் உள்ள, மாதுங்கா ரயில்வே ஸ்டேஷன் பெற்றுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பை அருகேயுள்ள மாதுங்கா ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட அனைத்து பதவிகளிலும், பெரும்பாலும் ஆண் ஊழியர்களே இருந்தனர்.

தற்போது, இந்த ரயில்வே ஸ்டேஷன், மகளிர் சிறப்பு ரயில்வே ஸ்டேஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது; இதையடுத்து, ஏற்கனவே இருந்த ஆண் ஊழியர்களுக்கு பதில், பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா கூறியதாவது:-

நான் ரயில்வேயில் சேர்ந்து, 25 ஆண்டு அனுபவத்தில், முதல் முறையாக, பெண் ஊழியர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவரும் இணைந்து, சிறப்பாக பணியாற்றி வருகிறோம்; இது, புது அனுபவமாக உள்ளது.

Leave a Response