ஆன்லைன் ரயில் டிக்கெட்டின் சேவை வரி செப்டம்பர் வரை ரத்து!

IRCTC
ரயில் டிக்கெட் ஆன் லைனில் புக் செய்தால் சேவை வரியை செப்டம்பர் வரை ரத்து செய்துள்ளது.

ரயில் பயணிகளிடம் மின்னனு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்களுக்கான சேவை வரியை ஜுன் 30ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி., ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் சேவை வரி ரத்து உத்தரவை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி தளர்வால் ஆண்டிற்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

Leave a Response