சசிகுமார்-நானி நடிக்கும் “தொண்டன்” பட நாயகனின் புதிய படம்!

samuththirakani
நடிகர், இயக்குநர் என இரண்டு பாதைகளில் பயணிக்கும் சமுத்திரகனி. தமிழில் தான் இயக்கிய “நாடோடிகள்” படத்தை “சம்போ சிவ சம்போ” என்ற பெயரில் ரவிதேஜாவை வைத்தும், “நிமிர்ந்து” நில் படத்தை “ஜன்டா பாய் கபிராஜூ” என்ற பெயரில் நானியை இரண்டு வேடங்களிலும் இயக்கினார். இரண்டு படங்களுமே தமிழைப்போலவே தெலுங்கிலும் வெற்றி பெற்றன. இந்த நிலையில், தற்போது “நின்னுகோரி” படத்தில் நடித்து முடித்துள்ளார் நானி.

அப்படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து “எம்சிஏ” என்றொரு படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தநிலையில், அடுத்தபடியாக சமுத்திரகனி இயக்கும் படத்தில் தான் நடிக்கயிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் நானி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் அந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் சசிகுமாரும், தெலுங்கு பதிப்பில் நானியும் நடிக்கிறார்களாம்.

Leave a Response