திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்!

p16d
திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் பதிவு செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள வெவ்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response