கேரளாவில் நடைபெற்ற வினோதத் திருமணம்..!

இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த வினோதத் திருமணம். கேரளாவை சேர்ந்த 25 வயது நாடகக் கலைஞரும், துணை நடிகருமான சூர்யா 19  வயதுடைய இசான்கேசான் என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

எப்போதும் வித்தியாசத்தை விரும்பும் இந்த காதல் ஜோடிகள், தங்களுடைய திருமணத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என எண்ணினர். முக்கியமாக இதுவரை யாரும் செய்துக்கொள்ளாத விதத்தில் தங்களுடைய திருமணம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனால், சூர்யா பெண்ணாக மாறவும், இசான் ஆணாக மாறவும் முடிவு செய்தனர். அதன்படி இந்த முடிவை தங்களுடைய பெற்றோரிடமும் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் இவர்களுடைய முடிவுக்கு பெற்றோர் ஒற்றுக்கொள்ள வில்லை என்றாலும் எப்படியோ சம்மதம் வாங்கினர்.

அதன்படி… கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யா ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறினார். அவரது காதலி இசான் 2015 ஆம் ஆண்டு ஆபரேசன் செய்துக்கொண்டு ஆணாக மாறினார்.

இந்நிலையில், இவர்களுடைய வித்தியாசமான திருமணம் இன்று கேரள அரசின் திருமண சிறப்பு திருத்த சட்டப்படி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த வித்தியாசமான காதல் ஜோடிகளுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response