எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 6 காப்பர் நிற ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஜூலை 10-ந்தேதி வெளியிடப்படுகிறது. எனினும் இந்த மாடலின் விற்பனை ஜெனரிக் மற்றும் ஆர்ட் பிளாக் நிறங்களின் விற்பனை துவங்கி ஒரு மாதத்திற்கு பின்னரே துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6 காப்பர் நிற 32 ஜிபி மாடல் அன்லாக் செய்யப்பட்ட மாடல் அமெரிக்காவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனால் பிரைம் வாடிக்கையாளர்கள் மட்டும் முன்பதிவு செய்து வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் ஆகஸ்டு 18-ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நோக்கியா 6 காப்பர் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட் குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டாகோர் பிராசஸர்
* 3 ஜிபி ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 3000 எம்ஏஎச் பேட்டரி
* 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
நோக்கியா 6 காப்பர் நிற பதிப்பு அமெரிக்காவில் 229.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.14,886 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு விநியோகம் செய்யப்பட மாட்டாது என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.